Thursday, March 11, 2010

சிரிப்பும் பேச்சும்...

அவள்
கடைக்கண் பார்வையில்
குளிர்காய்கிறேன் - ஆனால்
நேரிய பார்வையில்
தணலாகிறேன்.

அவள்
சிரிப்பிலே மனமகிழ்ந்
தெழுந்தாடினேன் - ஆனால்
பேச்சிலே மனமுடைந்
தொடிந்து போகிறேன்.

அபிராமி நானுன்னை வணங்கியெந்தன்
வாளெடுத்தால் நேரே பார்த்துப் பேசுகின்றாய்;
பூவெடுத்தால் கடைக்கண்ணால் சிரிக்கின்றாய்.

ஆனாலும்
'சிரிப்பினிலே நாட்டமில்லை...
பேச்சினையே விரும்புகிறேன்...'

3 comments:

  1. இது விளங்கி நான் எழுத
    விளங்காமல் நீவிரென்னைப்
    பழிப்பதுவென் காதுகளில்
    தெளிவாகக் கேட்கிறது.
    மீண்டும் சொல்கிறேன்...
    விளங்காதவைதான் கிறுக்கல்கள்.

    ReplyDelete
  2. You react differently to her sights coming in two dimensions....... This should be explored further....

    What make you to react in two different ways for two different kinds of sights from Her????

    ReplyDelete