Friday, March 5, 2010

நித்தியானந்தரும் ஊடகங்களும்

கள்ளச் சாமியார்கள் காலம் காலமாக இருப்பது உண்மைதான். சிலவேளைகளில் பிடிபடுகின்றனர். அவர்களின் குற்றம் இரண்டு வகைப்படும்:
1. ஏமாற்றல்
2. துரோகம்

பெண்களை ஏமாற்றிய (ஆ)சாமிகளும் உள்ளனர். (பிரேமானந்தா)
சமய வாழ்வில் ஈடுபடுவது போல் மக்களை ஏமாற்றி நெறி தவறி நடக்கும் (ஆனால் பெண்களை ஏமாற்றாது தங்கள் இச்சையைத் தீர்த்துக்கொள்ளும்) (ஆ)சாமிகளும் உள்ளனர். இதில் நித்தியானந்தர் இரண்டாம் வகை.

முதல் வகைக் குற்றம் ஒப்பீட்டளவில் பாரதூரமானது.
இரண்டாவது அவர்களின் பலவீனத்தால் விளைவது. போதிய பலம் (மன உறுதி) உடையவர்களே துறவு வாழ்வுக்குத் தகுதியானவர்கள். மனதில் ஒரு பக்கத்தில் ஆசைகளை வைத்துக்கொண்டு இந்த வாழ்வையும் மேற்கொள்ள விளைபவர்கள் வழிதவற நேரிடுகிறது. ஒருவேளை நித்தியானந்தாவுக்கு ஆரம்பத்தில் ஒழுங்கான ஆன்மிக நாட்டம் இருந்திருக்கலாம். ஆனால் போதிய மன உறுதி இல்லாததால் நெறிதவறிப் போய் அது பிடிபட்டிருக்கலாம். (விசுவாமித்திரரின் வாழ்க்கை புராணகால எடுத்துக்காட்டு.)

ஆனால்...

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால்....
எப்போதெல்லாம் எமது சமயத்திற்கு அவமானமான விடயங்கள் இடம்பெறுகிறதோ அப்போதெல்லாம் எமது இளைய சமுதாயம் கொதிப்படைந்து சமூக விழிப்புணர்வைத் தூண்டுகிறது. ஆனால் ஒரு பிரச்சனையும் இல்லாத வேளையில், உன்னத ஆன்மீக விடயங்களைப் பேசுபவர்களை 'அனுபவிக்கத் தெரியாதவன்' என்று எள்ளிநகையாடுகிறது.

இதற்கு எது பின்புலம்?

இந்திய (தற்போது இலங்கையும்!) தொலைக்காட்சி ஊடகங்கள். உதாரணம் சொன்னால் 'சன்' தொலைக்காட்சி. நித்தியானந்தா சல்லாபித்தானரன்றால் அதைத் தனியே செய்தியாய்ச் சொல்லாமல் சிறுவர் முதல் அனைவரும் பார்க்கும் சன் செய்தியில் ஒளிபரப்பியுள்ளனர்! ஏன்? எமது சமய நம்பிக்கைகளின் உண்மை விளக்கம் தெரியாமல் அவற்றை மூடநம்பிக்கைகள் மட்டுமே என்று பிரச்சாரம் செய்வதே சில தொலைக்காட்சிகளின் நோக்கமாய் உள்ளது. 'நிஜம்' நிகழ்ச்சியையும் சொல்லலாம். அவர்கள் எப்போதாவது சமயத்தின் அதிசய விஸ்ஸானப் பக்கங்களைச் சொன்னதுண்டா? காஞ்சி பீட 'ஜெயேந்திர' சுவாமிகளை அனைவருக்கும் தெரியும். ஏன்? அவர் மீது குற்றம் பதியப்பட்டது. ஆனால் அதே காஞ்சி பீட 'சந்திரசேகரேந்திர' சுவாமிகளை எத்தனை பேருக்குத் தெரியும்? இரண்டாமவர் ஞானியாய் வாழ்ந்தவர். நல்லதை விட்டுத் தீயதை மட்டுமே பொறுக்கி எமக்குக் காட்டுகின்றன இந்த ஊடகங்கள். நித்தியானந்தாவைக் கண்டிக்கும்போது அதை ஒளிபரப்பி (மறைமுகமாக அதே குற்றத்தைச் செய்த) ஊடகங்களையும் கண்டிக்க வேண்டும்.

என்ன செய்யலாம்?

தவறுகள் இடம்பெறும்போது கொதித்தெழுங்கள்; தவறில்லை. ஆனால் அதே சமயம் நல்லவற்றையும் நினைவில் கொள்கிறீர்களா என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் எமது சமயத்தைப் பாதுகாப்பதிலும், பயன்படுத்துவதிலும் இரண்டாவது முறையே சிறந்தது.

No comments:

Post a Comment