Wednesday, February 24, 2010
உன்னோடு...
பயணத்தில் பேச்சுத்துணையாய்
பரிவோடு நீ வந்தாய்
பாதியிலே கோபித்து
முகம்திருப்பிக் கொள்கின்றாய்.
பணயத்தைத் தொடர்வதா - இல்லை
பரிந்துன்னைக் கெஞ்சுவதா
எனவிங்கு நான் குழம்ப
நீயோ தொடர்கின்றாய்
உனக்கந்தக் கவலையில்லை.
உன்
கோபம் சரியில்லை - அதில்
வேகம் குறைவில்லை - என்
மனதில் மறைவில்லை - அதை
உணர்ந்தால் தவறில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
கடற்பயணமோ?
ReplyDeleteஇல்லை... மனப்பயணம்....
ReplyDelete