நீயும் எந்தன் பந்தம் - அதனால்
சாயும் எந்தன் இதயம் - ஆனால்
பாவம் நீயும் என்செய்வாய் - அதை
அறியா தென்னை மதிக்கின்றாய்
உனது கையில் இதுஇல்லை - என்
மனதின் இயல்பே இதுவானால் - அதை
உலையில் இடவும் துணிகின்றேன் - அது
முடிவில் எதனைத் தருமோசொல்
நீயா ரென்று புரிகிறதா?
புரியா விட்டால் மகிழ்வேன் நான்.
புரிந்தால் விலகிச் செல்வாயோ - அவ்
இழப்பை நானும் ஏற்பேனோ?
விளங்காவிட்டால் வருந்த வேண்டாம்....
ReplyDeleteஏனென்றால்
விளங்காததற்குப் பெயர்தான் கிறுக்கல்.