Tuesday, July 5, 2011

​வெள்ளைப் பூனையும் சிவப்புச் சட்டையும்



வெள்ளை நிறப் பூனை சிவப்புச் சட்டை போட்டதே
சட்டை கூடச் சோ்ந்து கொஞ்சம் சேட்டை விட்டதே
வெட்டி வேலை பார்த்துக் கொண்டு ஓடித் திரிந்ததே
முட்டி மோதிக் குட்டிக் குழியில் மாட்டிக் கொண்டதே

குழியில் கிடந்த குட்டிப் பூனை குழம்பித் தவித்ததே
வழியில் போன அன்னை ஒருத்தி அபயம் தந்தாளே
வாரி எடுத்து முத்தம் கொடுத்துப் போகச் சொன்னாளே
தேவி அவளின் காலைச் சுற்றிப் போக மறுத்ததே

ஆடை நீக்கி தேஜஸ் கொண்டு எழுந்து நின்றதே
தேவன் தன்னை நெஞ்சில் கொண்டு எழுந்து நின்றதே
போகும் வழியில் மாந்தர் தூற்றும் ஓசை கேளாமல்
சாகும் வரையில் நேர்மை வழியில் நடந்து சென்றதே.




No comments:

Post a Comment