Saturday, May 9, 2015

இந்து - இஸ்லாம் பற்றி நடிகர் ராஜ்கிரண்

கேட்டுச் சுவைத்தது.

இந்து - இஸ்லாம் பற்றி நடிகர் ராஜ்கிரண்.
(விகடனுக்கு அளித்த பேட்டியிலிருந்து)

நீங்க பிறப்பால் முஸ்லீம். ஆனா இந்து மதத்திலும் ஆழ்ந்த பற்றோடு இருக்கீங்க. அந்தப் புரிதல் எப்போ வந்தது?

திருமூலரையும் விவேகனந்தரையும் முழுமையா தெரிஞ்சிட்டா இந்து மதம்னா என்னன்னு புரியும். யாரெல்லாம் அறவழியில் நடக்கிறாங்களோ அவங்க அந்தணர் - இந்து.  ஒருவர் வந்து, "நபியே, எனக்கு இஸ்லாம் என்றா என்னன்னு சொல்லுங்க".  "நேர் வழி " அப்டீன்னாரு. நீ ஒரு காரியம் செய்யப் போறீன்னா இது தப்பு, இது நல்லதுன்னு மனசு சொல்லிரும்.  நீ நல்லதுன்னு சொல்றதை கேட்டா அது நேர் வழி. தப்புன்னு தெரிஞ்சு செய்தா நீ தவறானவன். நேர் வழியில் யாரெல்லாம் நடக்கிறானோ அவன் இஸ்லாமியன். இப்போ இந்து, இஸ்லாம் எல்லாம் ஒன்னொன்னு ஆகிபோச்சா? அந்தணர் என்போர் அறவோர். எவர் நேர் வழியில் நடக்கிறாரோ அவர் இஸ்லாமியர். ரெண்ணும் ஒண்ணுதானே?

Saturday, March 7, 2015

படித்ததில் பிடித்தது

இறுதி இலட்சியம் சுதந்திரம் ஒன்றுதான்.

1. முதற் படி - நமது உணர்ச்சிகள் வேட்கைகள் என்பவற்றின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது.

2. இரண்டாவது படி - சக மனிதனைப்பற்றிய பயத்திலிருந்து விடுபடுவது.

3. மூன்றாவது படி - எந்த ஒரு வெளிப்புற அதிகாரத்திலிருந்தும் விடுபடுவது.  

- நன்றி
ராமகிருஷ்ண விஜயம்