"வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும், எத்தகு பொறுப்புக்களை ஏற்றாலும் வாழ்க்கையின் அர்த்தங்கள், மனிதப் பண்புகள் மற்றும் வாழ்வின் இலட்சியம் இவை யாவும் அனைவருக்கும் பொதுவாகத்தான் உள்ளன. இன்றைய பரபரப்பான உலகில், இந்த அடிப்படைத் தத்துவங்கள் பற்றி யோசிக்க நமக்கு வாய்ப்புக்கள் குறைந்துள்ளன."
"கேள்வி கேட்பதென்பது ஒரு கலை. ஏன்? எதற்கு? எப்படி? என்று சிந்திப்பவன் வெற்றியின் முதல் படியில் காலை வைக்கிறான். அவனது உணர்வும் உள்ளமும் இந்தக் கேள்விகளால் விழிப்படைகின்றன. அவனது வாழ்க்கை உயர்ந்த நிலைகளை அடைகிறது........ தேடலோடு போகிற ஒருவனுக்குப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு ஒவ்வொரு அசைவும் பாடமாக அமையும். அந்தப் படிப்பினைகள் அவனை நல்ல திசையில் திருப்பும்."

-நன்றி 'பேசும் பிரபஞ்சம்'